2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரட்டை இலைக்கு இன்று விசாரணை

Freelancer   / 2023 ஜனவரி 30 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அ.தி.மு.க) தலைமை பதவியை கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியானது. 

தனி நீதிபதி முதலில் அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் பின்னர் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இருந்தன. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து , இரு அணிகளும் தனித்தனியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இருந்த போதிலும் இரு அணிகளும் தேர்தல் பணிக்குழுக்களை அமைத்து, தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன. 

இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி இடைக்கால தீர்ப்பு அளிக்க வேண்டும் என பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த இரண்டு வழக்குகளும் இன்று (30) திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதனால் அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .