2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இளைஞனின் உயிரை பறித்த ஷவர்மா

Freelancer   / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் தீக்கோயி பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் மாவேலிபுரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலிலிருந்து ஷவர்மா ஒன்றை ஒன்லைனில் ஓர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில் மறுநாள் காலையில் அவருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு உள்ளது. இதற்காக அங்குள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய போது மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X