2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தது இந்தியா

Freelancer   / 2023 ஒக்டோபர் 22 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ்  குழுவினர்,  பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், உயிர் வாழத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய விமானத்தை இந்தியா காசாவுக்கு அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காசாவில் தவித்து வரும் பாலஸ்தீனர்களுக்காக உயிர் காக்கும் மருந்துகள், வெட்ட வெளியில் படுக்கும் வகையில் ஸ்லீப்பர் பேக், தார்ப்பாலின், மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் முதல் கட்டமாக அனுப்பப்பட்டு உள்ளன என பதிவிட்டுள்ளார். மேலும், இந்திய மக்களின் அன்புப் பரிசு என பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X