2025 ஜூலை 17, வியாழக்கிழமை

எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1

Freelancer   / 2023 நவம்பர் 08 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி. 57 ராக்கெட் மூலம் ஆதித்தயா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் திகதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்ய லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலம் சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 29-ம் திகதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ புதன்கிழமை (08) வெளியிட்டுள்ளது. மேலும் ஆதித்யா-எல்1 விண்கலம் அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X