A.K.M. Ramzy / 2021 மே 31 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:
நீண்ட நேரம் ஒன்லைன் வகுப்புகள் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு நிறைய வேலை கொடுப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமியொருவர் பிரதமர் மோடியிடம் புகாரளித்துள்ளார்.இது தொடர்பான் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளிவந்துகொணடிருக்கின்றன.
கொரோனா தொற்று பரவலால் உலகெங்கிலும் உள்ள மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது பலருக்கும் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் இருந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் மூடியதால், குழந்தைகள் மாணவர்களுக்கு ஒன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேர ஓன்லைன் வகுப்புகளால் விரக்தியடைந்து பிரதமர் மோடியிடம் புகாரளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வெறும் 45 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் சிறுமி பேசியதாவது: எனது ஓன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதன்பின்னர் கணினி வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்?. என்ன செய்ய முடியும் மோடி ஐயா?. இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
டுவிட்டரில் இந்த வீடியோவை 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
13 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago