2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஏழு பிள்ளைகளுடன் பயணித்த தந்தை​ கைது

Janu   / 2023 ஜூன் 28 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பையில் இளநீர் வியாபாரம் செய்து வரும் ஒருவர், ஒரே இருசக்கர வாகனத்தில் 7 பிள்ளைகளை ஏற்றி சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் ​பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் தலைக்கவசம் அணியாமல் பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் அழைத்து சென்றது பதிவாகியுள்ளது. தனது நான்கு பிள்ளைகள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரின் 3 பிள்ளைகள் என 7 பிள்ளைகளை ஒரே ஸ்கூட்டரில் அவர் அழைத்து சென்றுள்ளார்.

ஸ்கூட்டரில் உட்கார இடம் இல்லாத சிறுவன் பின் பக்க கம்பியில் நின்றுக்கொண்டு பயணிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் இளநீர் விற்பவரை கைது செய்து ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X