2025 ஜூலை 17, வியாழக்கிழமை

‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை ஓட்டம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 18 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பல்வேறு சாதனை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அண்மையில், சந்திரயான்-3, ஆதித்யா-L1 திட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. அந்த வரிசையில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு கொண்டு வரக்கூடிய ககன்யான் என்ற திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ககன்யான் திட்டத்தின் மூலம் அடுத்தாண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக விண்வெளி வீரர்கள் தயார் செய்யப்பட்டு, விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  ககன்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பல்வேறு நடவடிக்கைகளை இஸ்ரோ முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில்மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கான சோதனை ஓட்டம், ஒக்டோபர் 21ஆம் திகதி நடைபெறும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X