Freelancer / 2025 மார்ச் 27 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கானா மாநிலம், பத்ராசலம் நகரில், புதன்கிழமை (26), 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பத்ராசலம் நகரில் சூப்பர் பஜார் சென்டர் பகுதியில் 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கட்டிடம் புதன்கிழமை (26) மதியம் திடீரென இடிந்து விழுந்து தரை மட்டமானது.
தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 4 தொழிலாளர்களின் சடலங்களை மீட்டனர். இடிபாடுகளில் மேலும் 4 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பழைய கட்டிடத்தின் மீதே எந்தவொரு அனுமதியும் பெறாமல் 4 மாடிகள் கூடுதலாக கட்டப்பட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கட்டிடம் ஓர் அறக்கட்டளைக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
மேலும் கட்டிடத்தின் அருகிலேயே ஒரு கோவிலும் கட்டப்பட்டு வருகிறது. சுற்றிலும் வீடுகள் நிறைந்த பகுதியில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது, அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
1 hours ago
8 hours ago
8 hours ago
07 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
8 hours ago
07 Apr 2026