2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கர்பா நடனமாடிய 10 பேர் பலி

Freelancer   / 2023 ஒக்டோபர் 22 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத்தில் நவராத்திரியின் 9 நாட்களும் அம்மாநில நாட்டுப்புற நடனமான கர்பா நடனமாடி மக்கள் கொண்டாடுவது வழக்கம். இதற்காக பொது இடங்களில் கர்பா பாடல், நடனங்கள் நடத்தப்படும். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத்தில் வௌ்ளிக்கிழமை (20) 24 வயது இளைஞரும், கபட்வன்ச் பகுதியில் 17 வயது சிறுவனும் கர்பா நடனத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதை விட அதிர்ச்சிகரமாக வதோதராவின் தபோய் பகுதியில் 13 வயது சிறுவன் மாரடைப்பால் இறந்துள்ளான். நவராத்திரியின் முதல் 6 நாட்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு இதய பாதிப்பு தொடர்பாக 521 அழைப்புகள் வந்துள்ளன. மூச்சுத் திணறல் தொடர்பாக 609 அழைப்புகள் வந்துள்ளன. இவை அனைத்து மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரையில் வந்துள்ளன.

இந்த நேரத்தில் தான் கர்பா நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம், கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X