A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு கடந்த 2008ஆம் ஆண்டு, ஜூன் 30இல் ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக வழங்கினார். இதன்மூலம் ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இவ்விருது, ரூ.10 இலட்சம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ், ஐம்பொன்னால் ஆன திருவள்ளுவர் சிலை, மு.கருணாநிதி உருவம் பொறித்த தங்கப்பதக்கம் ஆகியவற்றைக் கொண்டது.
தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு, நுண்கலை ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கோ, ஆய்வுக் குழுவினருக்கோ இந்த விருது வழங்கப்படும்.
2009ஆம் ஆண்டுக்கான முதல் விருதைப் பின்லாந்து அறிஞரான அஸ்கோ பர்போலோவுக்கு கோயம்புத்தூரில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கினார். இதற்கு பின் 2011 முதல்2016 வரையிலான ஆண்டுகளுக்கான விருது அறிவிப்பு 2017ஆம் ஆண்டு வெளியானது.
கடைசியாக 2020 ஏப்ரல் வரையிலான விருது அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் இவற்றுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, “பெற்ற விண்ணப்பங்களைப் பரிசீலித்து விருதாளர்களைத் தேர்வு செய்ய அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை.
அதில் தேவையின்றி மத்திய அரசின் பெயர் இழுக்கப்படுகிறது. ஏனெனில், கலைஞர் விருதுக்கும் மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தனர்.
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
1 hours ago