2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காற்று மாசு அபாயம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயிர்கழிவுகள் எரிப்பு, தசரா, தீபாவளி உள்ளிட்டவற்றால் புதுடெல்லியில் அடுத்த சில வாரங்களில் காற்று மாசு அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்த கூடும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் புதுடெல்லியில் நிலவும் கடுமையான மூடுபனி மற்றும் காற்று மாசு காரணமாக கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல பகுதிகளில் காற்று மாசு மிக மோசமான நிலைக்கு சென்று இருப்பதால் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தி வரும் புதுடெல்லி அரசு, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார பேருந்துகளின் சேவையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

தசரா கொண்டாட்டத்தில் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதும் டெல்லி மாசுவிற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது தொடர்பாக அண்டை மாநில அரசுகளுடன் பேசியுள்ள புதுடெல்லி அரசு பயிர்கழிவு எரிப்பை கட்டுப்படுத்த வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X