2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காற்று மாசு அபாயம்

Freelancer   / 2023 நவம்பர் 06 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்சிஆர் மண்டலத்தில் காற்றின் தரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. திங்கட்கிழமை (06)  நிலவரப்படி புதுடெல்லியில் காற்றின் தரக் குறையீடு (Air Quality Index – AQI) 488 ஆக உள்ளது. இந்த நிலையை எட்டும்போது மாசுபாடு உடைய காற்றை மக்கள் சுவாதித்தால் சுவாசப்பிரச்னைகள், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். இதன் காரணமாகவே மாசுபாடு அடைவதை தடுத்து காற்றின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதுடெல்லியில் அதிகரித்துள்ள ‘மிகக் கடுமை’ அளவுள்ள மாசு, அனைத்து வயதினரையும் நுரையீரல் மட்டுமல்லாது, இதயம், மூளை போன்ற பிற முக்கிய உறுப்புகளையும் பாதிப்படைய செய்யும் என டெல்லியை சேர்ந்த மருத்துவர்கள் மக்களை எச்சரித்துள்ளனர்.

இதுபற்றி மருத்துவர்கள் மேலும், மாசுபாடு அதிகரித்ததன் விளைவாக தலைவலி, பதட்டம், எரிச்சல், குழப்பம் மற்றும் நினைவாற்றல் திறன் குறைதல் போன்ற நிகழ்வுகள் திடீரென அதிகரித்துள்ளன. குறிப்பாக வயதானவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களை அதிகம் பாதிப்படைய செய்கிறது என தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X