A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 06 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராசத்
மேற்கு வங்கத்தில் அகதிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்தியஅரசும், பாஜகவும் தீவிரமாக இருக்கின்றன. ஆதலால்,அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமுலாகலாம் என்று பாஜக மூத்த தலைவரும் தேசிய பொதுச் செயலாளருமான கைலாஷ் விஜய்வர்க்கியா தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.
இது தவிர காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இப்போதே கூட்டணி குறித்த பேச்சை தொடங்கிவிட்டன. இந்த சூழலில் நார்த் 24 பர்கானா மாவட்டத்தில் "இனிமேல் யாருக்கும் அநீதியில்லை" என்ற பெயரில் பாஜக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தப் பிரசாரத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் விஜய்வர்க்கியா நேற்றுப் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில் “ மாநிலத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அகதிகள் மீது கருணை கொள்ள மறுக்கிறது. ஆனால் மாநிலத்தில் இருக்கும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க பாஜகவும், மத்திய அரசும் தீவிரமாக இருக்கின்றன என்றார்.
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
1 hours ago