2025 ஜூலை 19, சனிக்கிழமை

குதிரைக்கு கஞ்சா புகைக்கச் செய்து கொடுமை

Freelancer   / 2023 ஜூன் 27 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழ்பெற்ற புனிதத்தலமான ருத்ரப்பிரயாக் பகுதியில் மனிதர்களை சுமந்து செல்லும் குதிரையை குதிரைக்காரர்கள் கஞ்சா புகைக்கச் செய்து கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இமயமலை தொடரில் உள்ள வடக்கு மாநிலமான உத்ரகாண்டில் சார் தாம் என்ற புனித யாத்திரை மிகவும் பிரபலமானது. உத்தரகாண்டில் உள்ள நான்கு முக்கிய தலங்களான யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகியவற்றிக்கு பக்தர்கள் செல்லும் இந்த சார்தாம் யாத்திரை கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி தொடங்கியது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்லும் இந்த யத்திரைக்கு கால்நடையாக செல்வதை போலவே, மலைப் பகுதிகளில் குதிரை சவாரி மூலமும் பலர் பயணம் செய்கின்றனர். பல குதிரைக்காரர்கள் இந்த தொழிலை நம்பி அங்கு வாழ்ந்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X