2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குருமாவில் பூரான்

Freelancer   / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மயிலாடுதுறை மாவட்டத்தில்  சேர்ந்த ஒருவர் அசைவ உணவகம் நடத்தி வருகிறார். அவரது கடையில் ​அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் பரோட்டா வாங்கிச் சென்றுள்ளார். 

வீட்டில் சென்று சாப்பிடுவதற்காக பரோட்டா மற்றும் குருமா பார்சலை பிரித்து பார்த்த போது குருமாவில் பூரான் ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.


இதனையடுத்து மூர்த்தி இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்ததார். புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி கடைக்கு அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் கடை பராமரிப்பு இல்லாததால் முழுமையாக சீரமைத்த பின்னரே திறக்க வேண்டும் எனக் கூறி கடையையும் மூடி சென்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X