2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி. பல்ப்

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 7 மாத குழந்தைக்கு திடீரென தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை கோட்டயத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்ததில், குழந்தையின் நுரையீரலின் கீழ் பகுதியில் ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். அதனால் தான் குழந்தைக்கு தொடர் இருமல் ஏற்பட்டது மட்டுமின்றி, மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் குழந்தையின் வலது நுரையீரலில் சிவப்பு நிற சிறிய எல்.இ.டி.பல்ப் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்து உடனடியாக அகற்றினர்.

குழந்தை விளையாடிய பொம்மையில் இருந்து எல்.இ.டி. பல்ப் தெரியாமல் வாய் வழியாக உடலுக்குள் சென்றிருக்கலாம் என்றும், இதுபோன்ற நிகழ்வு மிகவும் அரிதாக  நடக்கக்கூடியது எனவும் உயிருக்கு ஆபத்தில்லாத விளையாட்டு பொருட்களையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X