A.K.M. Ramzy / 2020 நவம்பர் 12 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
கொரோனா வைரசை விட இந்த குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதியூட் டுகின்றன என பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு ஒத்திவைத்ததை, திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஏழு மாதங்களுக்கு பிறகு, 16ஆம் திகதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் தமிழக அரசு அறிவித்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து, பெற்றோரின் கருத்துகளை கேட்ட பின், பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 9 ஆம் திகதி நடந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படு வதாக (இன்று ;12) தமிழக அரசு அறிவித்துள்ளது. சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டதாவது: பள்ளிகள் திறப்பு - ஒத்திவைப்பு குழப்பங்கள் அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது. முன்யோசனைகள் இன்றி அறிவித்து பின்வாங்குவது முதல்வர் பழனிசாமி அரசின் வழக்கமாகிவிட்டது.
கொரோனா வைரசை விட இந்த குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதியூட்டுகின்றன. மக்களை மேலும் மேலும் குழப்பாதீர்கள்!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago