Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில் ரயிலில் பயணிக்கும் பயணிகளைத் தாக்கி அவர்களது கைத்தொலைபேசிகளை, திருடர்கள் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதி கோரமண்டல் விரைவு ரயிலிலும் இதே போன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த ரெயிலின் படிக்கட்டில் உட்கார்ந்து தொலைபேசியைப் பார்த்தபடி பயணம் செய்த வட மாநில இளைஞரின் கையில் இருந்து தொலைபேசியைப் பறிப்பதற்காகச் சிலர் குறித்த இளைஞரைக் கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத இளைஞர், நிலை தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் தலை உடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் 24 வயதுடைய ரோனி சேக் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து இரட்டை சகோதரர்களான விஜய், விஜய்குமார் ஆகிய இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
15 minute ago
40 minute ago
43 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
40 minute ago
43 minute ago
47 minute ago