Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஜனவரி 20 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் கொரோனாத் தொற்றினால் பெற்றோரை இழந்த 10,000 சிறாா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் குறித்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது”கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய 50,000 ரூபா இழப்பீட்டை, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜாா்க்கண்ட், குஜராத், பிகாா் ஆகிய மாநிலங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபா்களுக்கே வழங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தகவலின்படி, கொரோனா பரவத் தொடங்கிய பிறகு நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10,000 சிறாா்கள் தொற்று பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் பெற்றோரில் ஒருவா் அல்லது இருவரையும் இழந்துள்ளனா். தங்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி விண்ணப்பிப்பது கூட அச் சிறுவர்களுக்கு கடினம்.
இதனால் கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த சிறாா்கள், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய வலைதளத்தில் விவரங்களுடன் இடம்பெற்றுள்ள சிறாா்கள் ஆகியோரை அணுகி மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
26 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago