2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

சாதி அரசியல் செய்யவே கூடாது

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 09 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா, அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.அந்த அறிவிப்பு  தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இதன் பின்னர் சசிகலா,ஒவ்வொரு தொண்டர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,அவர்களின் உடல்நலம் விசாரிப்பதோடு, கட்சி நிலவரத்தை பற்றியும் பேசி வருகிறார்.

  சசிகலா, மதுரையை சேர்ந்த திருநங்கை சுஜாதா ஹர்சினி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மேகலா மற்றும் துரைராஜ், வின்சென்ட் ராஜா என தொண்டர்களை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்களிடம் சசிகலா பேசியதாவது:-

தொண்டர்கள் மனதை இப்போது கட்சியில் இருப்பவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு. எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு. தொண்டர்களோடு இருந்து, எம்.ஜி.ஆர். (தலைவர்), ஜெயலலிதா (அம்மா) காலத்தில் எப்படி கட்சியை நடத்தினார்களோ? அப்படிதான் நான் கட்சியை நடத்துவேன்.

தொண்டர்கள்தான் கட்சி என்று நான் நினைக்கிறேன். கவலைப்படாதீர்கள் விரைவில் நான் எல்லோரையும் சந்திக்கிறேன். நல்லபடியாக கட்சியை கொண்டு வருவோம். ஆட்சிக்கும் வருவோம். எல்லாமே என் பிள்ளைகள்தான். கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் நிச்சயம் வருவேன்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .