2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சிறுநீர் கழித்ததைக் கண்டதால் சிறுவனை பழிவாங்கிய உறவினர்

Freelancer   / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்த  சிறுவன் ஒருவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்துள்ளான். பொலிஸார் இச் சம்பவத்தை விபத்து வழக்காக பதிவு செய்த நிலையில் சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சிறுவனின் மரணம் குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு விபத்து நடந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர்.

அந்த சிசிடிவி காட்சியில் வீதியோரம் நின்றுக்கொண்டிருந்த கார், சிறுவன் வந்ததும் அவனை பின் தொடர்ந்து சென்று மோதுகிறது. பின்னர் சத்தம் கேட்டு ஓடி வரும் பொதுமக்கள் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தன.

 அந்த கார் சிறுவனனின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.   அவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனின் பெற்றோரிடம் இது குறித்து பொலிஸார்  விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கோயிலின் சுவற்றில்  உறவினர் சிறுநீர் கழித்துள்ளார். இதை கண்ட சிறுவன், உறவினரின்   குடும்பத்தார் முன்னிலையில் "இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்துட்டு, கோயில் சுவரை அசிங்கப்படுத்துகிறாயே" என திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான உறவினர் சிறுவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும் சிறுவன் மீது கார் ஏற்றியது மட்டுமன்றி அவரை மருத்துவமனையில் அனுமதித்து நாடகமாடியுள்ளார். தொடர்ந்து சிறுவனின் இறுதி சடங்குகளிலும் அவர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X