A.K.M. Ramzy / 2020 நவம்பர் 15 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவண்ணாமலை;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுக்கா மூர் தெருவில் வசித்து வரும் சந்திரா என்பவர் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்ப ட்டது. இதன் காரணமாக அருகில் இருந்த வீடுகள் உட்பட 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் அந்த வீடுகளில் இருந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதனை தொடர்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின், இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன், உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 4 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago