Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கத்தாவை சேர்ந்த அர்னவ் தாகா (15) என்ற சிறுவன் தன்னுடைய 8 வயதிலிருந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமுடன் இருந்துள்ளார். அன்றைய நாளிலிருந்து அட்டை பெட்டிகள் மற்றும் சீட்டு அட்டைகளை வைத்து புதுவிதமாக வடிவமைப்புகளை உருவாக்கி விளையாடுவது வழக்கம். இந்நிலையில்தான் கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்த நேரத்தில், ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என முயற்சித்துள்ளார்.
அப்போது சீட்டு விளையாடும் 1,43,000 அட்டைகளை வைத்து பெரிய வடிவமைப்பில் கட்டிடங்களை கட்டுவதற்கு முயற்சி எடுத்துள்ளார். உடனே இந்த வெற்றி கிடைத்துவிடவில்லை. பலமுறை முயற்சி செய்துள்ளார்.
இவ்வாறு விட முயற்சி செய்து அவர் கொல்கத்தா நகரத்தின் நான்கு மக்காவோ ஹோட்டல்களின் தோற்றத்தினை உருவாக்கி உலக சாதனைப் படைத்துள்ளார். சுமார் 40 அடி நீளம், 11 அடி 4 அங்குல உயரம் மற்றும் 16 அடி 8 அங்குல அகலம் அளவு கொண்டதாக வடிவமைப்பதற்கு இவர் 41 நாள்களை செலவிட்டுள்ளார். முக்கியமாக இவர் அட்டைகளை அடுக்குவதற்காக டேப், கம் போன்ற எவற்றையும் பயன்படுத்தாதது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago