2025 மே 09, வெள்ளிக்கிழமை

சுவாச நோய் குணமாக இரும்புக் கம்பியால் சூடுவைத்த தாய்

Mayu   / 2024 ஜனவரி 01 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறிவியல் உலகம் எவ்வளவுதான் முன்னேறி எண்ணற்ற சாதனைகள் படைத்தாலும், அறியாமையால் மூடநம்பிக்கை எனும் இருளுக்குள் இன்னும் முடங்கிக்கிடப்பதுதான் வேதனையாக இருக்கிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் பந்த்வா எனும் கிராமத்தில் ஒன்றரை வயது  குழந்தைக்கு சுவாச நோய் இருந்துள்ளது.

இதைக் குணப்படுத்த வேண்டுமானால், குழந்தைக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்தால் போதும் என்ற மூடநம்பிக்கையால், அந்த தம்பதியரும் குழந்தைக்கு சூடு வைத்துள்ளனர்.

இதில் அந்தக் குழந்தைக்குப் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X