2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சோனியா கண்டனம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 31 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையே போர் நீடித்து வரும் சூழலில், உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள அழைப்பு விடுத்து, ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி: “இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது சரியல்ல. இது கண்டிக்கத்தக்கது. இஸ்ரேலுடன் சமாதானமாக இணைந்து பலஸ்தீனம் நடந்து கொள்ள வேண்டும் என்பது காங்கிரஸ் நிலைப்பாடு.

அங்கு இறையாண்மை கொண்ட சுதந்திரமான, சாத்தியமான மற்றும் பாதுகாப்பான தேசம் அமைய நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். உடனடியாக அங்கு போரை நிறுத்த பல நாடுகளும் முயற்சி செய்ய வேண்டும்” கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X