2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

டொனிக்கிற்கு பதிலாக பினாயில் கொடுத்த தாதி

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 11 மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளது.

ஷர்தாபென் மருத்துவமனைக்கு 11 மாத கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகிய உடல் நல பாதிப்புகள் உள்ளதாகவும் வருகை தந்துள்ளார்.  குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், விட்டமின் டொனிக்கை மருந்து சீட்டில் எழுதி கொடுத்துள்ளனர்.

மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வழக்கமான பரிசோதனைக்கு பிறகு குழந்தைக்கு கொடுப்பதற்காக விட்டமின் டொனிக்கை மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் தாதி விட்டமின் டொனிக் என ஒரு பாட்டிலை கொடுத்து இருக்கிறார். குழந்தையின் தாயும் தாதி கூறியபடி டொனிக்கை கொடுத்துள்ளார்.

அதை குடித்த மறுநிமிடமே குழந்தையின் வாயில் இருந்து நுரையாக வந்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் தாய், டொனிக்கை முகர்ந்து பார்த்த போது பினாயில் வாடை வந்துள்ளது.இதையடுத்து, அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X