2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு தடை

Freelancer   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு வர அனுமதியில்லை என்றும் அவர்கள் விடுமுறையில் இருப்பதாகக் கருதப்படுவர் என்றும் டெல்லி மாநில கல்வித் துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் பல்வேறு மாநிலங்கள் பாடசாலைகளைத் திறப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. 

அந்த வகையில், டெல்லியில் ஏற்கெனவே 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடசாலைகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதேபோல நவம்பர் 1ஆம் திகதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பாடசாலை திறக்கப்படும் என்று டெல்லி அரசு சார்பில் நேற்று (29) அறிவிப்பு வெளியானது.

இந்நிலையிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு வர அனுமதியில்லை என்று டெல்லி கல்வித் துறை அறிவித்துள்ளது.
 
முன்னதாக அனைத்து அரச பாடசாலை ஆசிரியர்களும் ஊழியர்களும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று டெல்லி மாநிலக் கல்வித்துறை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .