2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தன்பாலின தம்பதி :உச்ச நீதிமன்றுக்கு முன் நிச்சயதார்த்தம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. 

அப்போது இவ்வழக்கில் 4 விதமான தீர்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் சட்டம் இயற்றும் அதிகாரம் தங்களுக்கு கிடையாது என்பதை சுட்டி காட்டிய நீதிபதிகள்,  மத்திய அரசின் முடிவிற்கு இதனை விட்டுவிட்டனர்.

இந்நிலையில் ஏமாற்றம் அடைந்த  தன்பாலின  ஜோடி ஒன்று உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே மோதிரம் மாற்றி தங்கள் நிச்சயதார்த்தத்தை செய்து முடித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X