2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

தமிழக அரசின் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை: 

பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் எதிர்வரும் 2021 ஜனவரி 4ஆம் திகதி முதல் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 2.10 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்றும் இலங்கை தமிழர்களின் 18,923 அட்டைகளுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று மாலை பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை காலங்களில் அரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், வெல்லம் கொடுக்கப்பட்டது.

 கடந்த ஆண்டு வரை 1000 ரூபாயாக கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை இந்த ஆண்டு 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்நாளிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

2.10 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடை வார்கள் என்று தெரிவித்தார் முதல்வர் பழனிச்சாமி.  

இந்த நிலையில் ஜனவரி 4ஆம் திகதி முதல் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று மாலை பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.        


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .