2025 ஜூலை 17, வியாழக்கிழமை

“தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது”

Freelancer   / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது.

இந்நிலையில், கர்நாடகாவில் நீர்வரத்து பூஜ்ஜியமாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளதாக அம்மாநில கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும்," தமிழகத்திற்கு தற்போது கர்நாடகா தண்ணீர் திறக்கும் நிலையில் இல்லை. கர்நாடகா அணைகளில் மொத்தமாக 551 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது குடிநீருக்கு மட்டுமே போதுமானது" என்று கூறியுள்ளார்.

​மேலும் தமிழகத்திற்கு 23 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கனஅடி நீர் திறந்துவிட காவிரி நீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் மறுப்பு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X