A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகப்பட்சமாக நாமக்கல்லில் 59.73 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக நெல்லையில் 41.58 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழகம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பெரிதாக சட்டம்- ஒழுங்கு பிரச்சினை இல்லை. வாக்குப்பதிவு சுமுகமாக நடக்கிறது.
தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல்லில் 59.73 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லையில் 41.58 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன
உதயநிதி ஸ்டாலின் மீதான புகார் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம். அடுத்து முடிவு செய்வோம். மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தால் டோக்கன் அளித்து வாக்களிக்க வைப்போம். அதன் பின்னர் கடைசியில் கொரோனா வைரஸ் பாதித்த வாக்காளர் வாக்களிக்க வைக்கப்படுவார்கள். பிபிஇ கிட் அணிந்து வரலாம், அல்லது இங்கு தருவோம்”.இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago