2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி பாதயாத்திரை

Freelancer   / 2023 நவம்பர் 06 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய காலக்கட்டத்தில் திருமண விஷயங்களில் பெண்களின் எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது. தங்களது வருங்கால கணவர். சொந்த வாகனம், வீடு என வழங்குபவராக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதன் காரணமாக நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் உள்ளனர்.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தில், விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது இல்லை. விவசாயம் செய்வதால் அவர்களுக்கு பெண் கொடுக்க சிலர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோடஹள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 160 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாதேஸ்வரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர். தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவும்; நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X