Editorial / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வைரஸ் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்த திருமாவளவன் முதுகு எரிச்சல் காரணமாக அவதிப்பட்டார்.உடல் வலி அதிகமாகி காய்ச்சலும் அவருக்கு வந்துவிட்டது. இதனால் அவர் வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, செப்.30-ம் திகதி வரை தொண்டர்கள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
43 minute ago