2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தேர்தல் திகதியை தள்ளிய முகூர்த்தம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 12 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் திகதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில், ராஜஸ்தானுக்கு நவம்பர் 23ஆம் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, அன்றைய தினத்தில் ஏராளமான திருமணங்கள், பொது நிகழ்ச்சிகள், பண்டிகைகள் வருவதால், திகதியை மாற்றிவைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.  இதனை ஏற்று, நவம்பர் 23ஆம் திகதிக்கு பதிலாக 25ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி டிசம்பர் 3ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X