2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

நடனமாடிய பெண் பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 10 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேசம், இந்தூரில், திருமணத்தில், பாடல் ஒன்றுக்கு நடனமாடிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 மத்திய பிரதேசம், இந்தூரை சேர்ந்த பெண் ஒருவர், தனது சகோதரியின் திருமணத்தையொட்டி மேடையில் பாடல் ஒன்றுக்கு நடனமாடினார். அப்போது திடீரென மயங்கி கீழே  விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.

அவரை சோதனை செய்த வைத்தியர்கள் அவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் திருமணத்துக்கு வந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவலறிந்த பொலிஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .