2025 ஜூலை 17, வியாழக்கிழமை

“நான் மோடி அல்ல”

Freelancer   / 2023 நவம்பர் 02 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, “நான் நரேந்திர மோடி அல்ல. நான் ஒரு வாக்குறுதியை அளிக்கும்போது அதை நிறைவேற்ற முயற்சி செய்வேன். பொதுமக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் வெளிநாட்டில் மீட்கப்பட்ட கருப்பு பணத்தில் இருந்து டெபாசிட் செய்வதாக மோடி உறுதி அளித்தார்.

ஆனால் இதுவரை உங்கள் கணக்குகளுக்கு ஒரு ரூபாய் கூட மாற்றப்படவில்லை. அதானியின் வங்கிக் கணக்கில் பல லட்சங்கள் குவிந்துள்ளன. மோடி போல் இல்லாமல் நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்” என கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X