2024 மே 04, சனிக்கிழமை

நாய் மறுத்த பிஸ்கட்டை தொண்டருக்கு கொடுத்த ராகுல்

Mithuna   / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2-வது கட்ட நடை பயணத்தை கடந்த 14-ந் திகதி மணிப்பூரில் இருந்து தொடங்கினார். அவர் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் 'பாரத ஒற்றுமை நீதி' யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

அந்த யாத்திரையின் போது ராகுல்காந்தி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை அவர் காங்கிரஸ் தொண்டருக்கு கொடுக்கும் வீடியோவை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.

ராகுல்காந்தி திறந்த வாகனத்தில் சென்றார். அப்போது தன்னுடன் இருந்த நாய்க்கு பிஸ்கட்டை ஊட்டினார். அதை சாப்பிட மறுத்ததால் அவர் தட்டில் வைத்தார். தட்டில் வைத்த அந்த பிஸ்கட்டை ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு கொடுத்தார். வீடியோ பதிவில் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

பா.ஜனதா தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் “கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாய்களுடன் ஒப்பிட்டார். தற்போது ராகுல் காந்தி நாய் சாப்பிடாத பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு கொடுத்துள்ளார்.

ஒரு கட்சியின் தலைவரும், பட்டத்து இளவரசரும் கட்சி தொண்டர்களை நாய்களை போல் நடத்தினால் அத்தகைய கட்சி காணாமல் போவது இயற்கையானது” என பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .