2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நியூஸ்க்ளிக் நிறுவனருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், நியூஸ் கிளிக் நிறுவனர் புர்கயாஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரை 10 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி வழங்கியது.

நியூஸ் கிளிக் மற்றும் அதன் பத்திரிகையாளர்களுடன் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பொலிஸார் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து  நியூஸ் கிளிக் நிறுவனர் புர்கயாஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக பல பத்திரிகையாளர்களை புதுடெல்லியில் பொலிஸார் விசாரித்து புதுடெல்லியில்  உள்ள ‘நியூஸ்க்ளிக்’ அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் அவ் இவருரையும் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை ஏழு நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிடவே    ‘நியூஸ்க்ளிக்’ நிறுவனம் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X