2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’நூரி’யால்’ ராகுலுக்கு சிக்கல்

Freelancer   / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தாயார் சோனியாவுக்கு அளித்த நாய்க்கு 'நூரி' என்று பெயர் வைத்ததை எதிர்த்து அவர் மீது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.


'நூரி' என்ற வார்த்தை இஸ்லாமிய புனித நூலான குரானுடன் தொடர்புடையது, குரானில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது என்று வழக்குத்தொடுத்துள்ளார்.

ராகுல் காந்தி தனது முகநூல் பக்கம், யூடியூப் பக்கத்தில் நாயின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், செய்தித்தாள்களிலும் இது தொடர்பான செய்திகள் வந்துள்ளன. அவற்றை ஆதாரமாக காட்டியுள்ளோம்' என்றார்.

உலக விலங்குகள் தினத்தையொட்டி கடந்த 4-ந்திகதி தனது தாயார் சோனியாவுக்கு 'நூரி' என்று பெயரிடப்பட்ட நாய்க்குட்டியை ராகுல் காந்தி பரிசளித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X