2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’பெகாசஸ்’ ஒட்டு கேட்பு வழக்கு: இன்று தீர்ப்பு

Niroshini   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பெகாசஸ்' போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், இன்று இடைக்கால தீர்ப்பளிக்கிறது.

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த, 'பெகாசஸ்' என்ற உளவு மென்பொருள் வாயிலாக ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக் கேட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

'இந்த விவகாரத்தை தனி அதிகாரம் படைத்த அமைப்பின் வாயிலாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒட்டுக் கேட்பு விவகாரத்தில், பெகாசஸ் மென்பொருளை சட்ட விரோதமாக மத்திய அரசு பயன்படுத்தியதா, இல்லையா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, 'இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. விரிவான அறிக்கை தாக்கல் செய்வது தேச நலனுக்கு நன்மை அளிக்காது. 'எனவே அறிக்கை தாக்கல் செய்ய விரும்பவில்லை. நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கிறோம்' என, தெரிவித்தது


இதையடுத்து, நீதிபதிகள், 'இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்படும். தனி அதிகாரம் படைத்த அமைப்பு விசாரணை நடத்துவது குறித்து விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்' என, அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் இடைக்கால தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .