2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பயணிகளை கவரும் ​ரயில் கோச் உணவகம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் நெக்லஸ் சாலை ரயில் நிலைய வளாகத்தில் 'ரயில் கோச் உணவகம்' ஒன்றைத் தெற்கு மத்திய ரயில்வே தொடங்கி உள்ளது.

நெக்லஸ் ரோடு ரயில் நிலையத்தை சுற்றி நிறைய சுற்றுலா இடங்கள் உள்ளன. தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளுக்கு தனித்துவமான உணவு அனுபவத்தை வழங்குவதற்காக, பயன்படுத்தப்படாத ஒரு பெட்டி முற்றிலும் நவீன மற்றும் அழகியல் உட்புறங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

 "ரயில் கோச் உணவகத்தின்" பராமரிப்பு ஐதராபாத் பூமராங் உணவகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள பிரபலமான இடங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த கோச் உணவக முயற்சியானது பயணிகளுக்கு மறக்க முடியாத உணவு அனுபவத்துடன் மீண்டும் இங்கு வரவேண்டும் என்று ஏக்கத்தையும் வரவழைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X