2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பற்களை காட்டி அச்சுறுத்தும் குரங்கு

Freelancer   / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமதுரை பகுதியில், கடந்த 2 மாதங்களாக ஒற்றை குரங்கு ஒன்று சுற்றி வருகிறது. இது வீடுகளில் உள்ள பெண்கள் மற்றும் முதியோரை அச்சுறுத்தும் வகையில் அலைந்து திரிகிறது. இதுமட்டுமின்றி கடை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை தூக்கி செல்கிறது. பள்ளி குழந்தைகள் கொண்டு செல்லும் உணவு பொருட்களையும் பறித்து சென்று விடுகிறது. அந்த குரங்கை யாராவது விரட்ட முயன்றால் கூர்மையான பற்களை காட்டி, கடிக்க வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் வடமதுரை பொலிஸ்  நிலையம் அருகே உள்ள ஒரு மருந்துக்கடைக்குள்  புகுந்த அந்த குரங்கு அங்கிருந்த மிட்டாய் டப்பாவை தூக்கியது. இதனைக்கண்ட கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து, குரங்கை விரட்டினார். ஆனால் அந்த குரங்கு, மிட்டாய் டப்பாவுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X