2025 ஜூலை 16, புதன்கிழமை

“பழிவாங்கவே நாடு திரும்பினேன்”

Freelancer   / 2023 நவம்பர் 09 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்திகதி நடந்த குண்டுவெடிப்பில் 3 பெண்கள், 12 வயது சிறுமி என 4 பேர் பலியாகினர்.

இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின்   கைது செய்யப்பட்டார். 31ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டு வெடிப்பு சதியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? அவருடைய தொடர்பு பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவரை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம்  அனுமதி வழங்கியது.     டொமினிக் மார்ட்டின் வெளிநாட்டில் பல ஆண்டுகள் இருந்திருப்பதால் அவருக்கு குண்டுவெடிப்பு சதியை நிறைவேற்ற வெளிநாட்டை சேர்ந்த யாரும் உதவினார்களா? என்று பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனால் யொகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த சபையை பழிவாங்குவதற்காகவே வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததாகவும், அவர்கள் நடத்திய பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X