2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

பாஜகவிலிருந்த விலகினார் பாட்டீல்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 17 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஜெய்சிங்ராவ் கெய்க்வாட் பாட்டீல் செவ்வாய்க் கிழமை கட்சியிலிருந்து விலகினார்.

மகாராஷ்டிரத்தின் பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை செவ்வாய்க்கிழமை காலை அனுப்பினார்.

ராஜினாமாக் கடிதத்தில் ஜெய்சிங்ராவ் கூறியதாவது:

"10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சித் தலைமை என்னை தொடர்ந்தும் புறக்கணித்ததில் நான் வருத்தத்தில் உள்ளேன். எனவே, நான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் மாநில பாஜக பிரிவில் இருந்தும், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் கூறினார்.

ஜெய்சிங்ராவ் மத்திய மற்றும் மாநில அமைச்சரவைகளில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .