2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

’பாதுகாப்பாக உள்ளேன்; முருகக் கடவுள் காப்பாற்றிவிட்டார்’

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 18 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

தான் பத்திரமாக இருப்பதாகவும், முருகக் கடவுள் காப்பாற்றிவிட்டார் என்றும் விபத்து குறித்து குஷ்பு தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசின் தடையை மீறி நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு நடைபெறும்போது, காவல்துறையினர் பாஜக தலைவர்களைக் கைது செய்து வருகிறார்கள்.

இன்று (நவம்பர் 18) கூடலூரில் வேல் யாத்திரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக, சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு காரில் பயணித்தார். அப்போது மேல்மருவத்தூர் அருகே அவருடைய கார் விபத்தில் சிக்கியது.

குஷ்பு கார் விபத்து என்ற செய்தி வெளியாகி, பெரும் பரபரப்பை ஏறள்படுத்தியது. தற்போது கார் விபத்து தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 

"மேல்மருவத்தூர் அருகே ஒரு கன்டெய்னர் லொறி எங்கள் கார் மீது மோதியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், இறையருளாலும் நான் பத்திரமாக உள்ளேன். கடலூர் வேல் யாத்திரைக்கான பயணம் தொடர்கிறது. காவல்துறையினர் விசாரிக்கின்றனர். முருகக் கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார். என் கணவர் முருக பக்தர். அவர் நம்பிக்கையின் பலனை நான் இன்று கண்டுகொண்டேன்.

ஊடகங்கள் தகவலை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டு கிறேன். எனது கார் சரியான பாதையில்தான் பயணித் தது. கன்டெய்னர் லொறி வந்த திசை எங்களுக்குத் தெரியவில்லை. அந்த வாகனமே எங்களின் கார் மீது மோதியது. பொலிஸார் இந்த விபத்தில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து லொறி சாரதியிடம் விசாரணை செய்த  வருகின்றனர்''.இவ்வாறு குஷ்பு தெரிவித் துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .