Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 10 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு சில பிரச்னைகள் ஏற்பட்டால் அதற்காக சில பரிகாரங்கள் கூறப்படுவதுண்டு. குறிப்பாக திருமணம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தால் வாழை மரத்தை திருமணம் செய்து, அதை வெட்டிய பின்பு மறுமணமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது வேறு ஏதேனும் குறிப்பிடத்தக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் பழக்கத்தில் இருந்து வருகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. மும்பையில் 26 வயதான பெண் ஒருவரை, அவரது பெற்றோர்கள் ஒரு பானையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர். பானையைப் பரிகாரமாக திருமணம் செய்து கொண்டால் தான் அப் பெண்ணின் வருங்கால கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
தனது பெற்றோர் தன்னைத் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்று நினைத்த பெண்ணுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. தினசரி இதைப் பற்றி பேசியே வீட்டில் நிம்மதி இல்லாமல் போனதாக அப்பெண் கூறியுள்ளார். முட்டாள்தனமாக இருக்கிறது. மன ரீதியாக தன்னை மிகவும் பாதிக்கிறது. இது உண்மையா? இப்படி செய்வார்களா? என அப்பெண் இதைபற்றி REDDIT எனும் தளத்தில் விளக்கம் கோரியுள்ளார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago