2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிணவறை முன் காத்திருக்கும் நாய்

Freelancer   / 2023 நவம்பர் 06 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவின் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்டபோது அவருடன் வளர்ப்பு நாய் வந்துள்ளது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது உடல் அங்குள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டு மற்றொரு நுழைவு வாயிலில், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதை அறியாத அவரது வளர்ப்பு நாய் பிணவறை முன்பு கடந்த 4 மாதங்களாக காத்துக் கிடக்கிறது. இதை மருத்துவமனை ஊழியர் கவனித்துள்ளார்.

முதலில் சில நாட்களாக அந்த நாய் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. அதன்பின் சிலர் வழங்கும் பிஸ்கட் மற்றும் இதர உணவு பொருட்களை அந்த நாய் சாப்பிட்டு தனது எஜமானர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் பிணவறை அருகே காத்துக் கிடக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X