Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மார்ச் 08 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேசத்தில் சர்வதேச விமான நிலையம், பிரதமர் மற்றும் ஜனாதிபதி இல்லங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் உத்தர பிரதேசத்தில், வாரணாசி விமான நிலைய உயர் அதிகாரி ஒருவருக்கு கடிதமொன்று வந்துள்ளது. அதில் மார்ச் 8ஆம் திகதி நாட்டில் உள்ள பல்வேறு சர்வதேச விமான நிலையங்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதி இல்லங்கள் மீது ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் ‘பீகாரில் நீர்ப்பாசன துறையில் உதவி பொறியியலாளராக இருக்கும் வினீத் குமார் என்பவரே தனது எதிரிகளை பழிவாங்கும் விதமாக, அவர்கள் எழுதியது போன்று மிரட்டல் கடிதமொன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வினீத் குமாரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago