2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பிரபல பத்திரிகையாளர்களின் வீடுகளில் சோதனை

Freelancer   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புது டெல்லியில் பொலிஸார் பல முக்கிய பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை (03)  சோதனை நடத்தினர்.

நியூஸ்க்ளிக் என்ற செய்தி இணையதளத்திற்கு நிதியுதவி அளித்தது தொடர்பாகவே விசாரணைகளை முன்னெடுத்து அவர்களிடம் சோதனை நடத்தினர் அதன்போது  அழைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சீனாவிடம் இருந்து நியூஸ் கிளிக் சட்டவிரோதமான நிதியைப் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பத்திரிக்கையாளர்கள் மீதான இந்த சோதனை நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தின் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

2009 இல் தொடங்கப்பட்ட நியூஸ் கிளிக் என்பது ஒரு சுயாதீனமான செய்தி மற்றும் நடப்பு விவகார இணையதளம் ஆகும், இது அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் அறியப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வரி அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது.

இணையதளத்தின் ஆசிரியர் பிரபீர் புர்கயாஸ்தா, பத்திரிகையாளர்கள் அபிசார் சர்மா, அவுனிந்த்யோ சக்ரவர்த்தி மற்றும் பாஷா சிங், பிரபல நையாண்டி கலைஞர் சஞ்சய் ரஜௌரா மற்றும் வரலாற்றாசிரியர் சோஹைல் ஹஷ்மி ஆகியோர் அடங்குவர். அவர்களில் சிலர் விசாரணைக்காக பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சோதனைகள் குறித்து பொலிஸார் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் ஷர்மா எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சோதனை நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X