2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிரியாணிக்குள் தலை

Freelancer   / 2023 நவம்பர் 07 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம எர்ணா குளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்த ஒருவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பொதிகள் வாங்கியுள்ளார்.

அவற்றை குடும்பத்துடன் சாப்பிட வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார். வீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்த போது, அதில் ஒரு பொதியில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை இருந்துள்ளது. அதனைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



இந் நிலையில் பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய பின்பு  உணவகத்துக்கு சீல் வைத்து மூடியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X